அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் பன்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் பன்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x

அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் பன்நோக்கு கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒப்புதல்கள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"அமைச்சரவை கூட்டத்தில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிராம பஞ்சாயத்துகளில் துவக்க வேளாண்மை கடன் சங்கங்கள், பால் மற்றும் மீன் வள கூட்டுறவு சங்கங்கள் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் பன்நோக்கு கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அடிமட்ட மக்களுக்கு உபயோகப்படும் வகையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

துடிப்பான கிராமங்களின் திட்டத்தின் படி, 4800 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2022-23 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளுக்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story