நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்? சிவசேனா கேள்வி


நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்?  சிவசேனா கேள்வி
x

நம்பிக்கை வாகெடுப்பில் யார் வாக்களிக்க முடியும், முடியாது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என சிவசேனா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளதால் மராட்டிய அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இதில் நேற்று முன்தினம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. அதே நேரத்தில் சட்டசபையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

இந்தநிலையில், 16 எம்.எல்.ஏ தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலுவையில் ஆளுநர் ஆணை சட்ட விரோதம் என சிவசேனா கொறாடா சுனில் பிரபு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. மராட்டிய சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ணூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் தொடங்கியது.

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வெறும் ஒரே ஒரு நாள்தான் காலஅவகாசம் வழங்குகிறார் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்த உடன் இந்த அறிவிப்பு வெளியாகிறது.

நம்பிக்கை வாகெடுப்பில் யார் வாக்களிக்க முடியும், முடியாது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என சிவசேனா தெரிவித்துள்ளது. மேலும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி விட்டால் குறிப்பிட்ட நபரை சட்டமன்ற உறுப்பினராக கருத முடியாது எனவும் தகுதிநீக்க நோட்டீஸ் நிலுவையில் இருக்கும் போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எப்படி வாக்களிக்க முடியும்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் தகுதி நீக்க நடவடிக்கைக்கு அனுமதி தேவை என சிவசேனா தரப்பில் முன் வைக்கப்பட்டது.நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் முதலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. நிலுவையில் உள்ள தகுதி நீக்க நோட்டீஸ் வழக்கிற்கும் நம்பிக்கை வாகெடுப்புக்கும் என்ன சம்பந்தம்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.


Next Story