நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி. அறிவிப்பு!
நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. இங்கு அளிக்கப்படும் சான்றிதழ்கள் தகுதியற்றவை எனவும் மாணவர்களுக்கு யு.ஜி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள், உத்தர பிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திராவில் தலா 2 பல்கலைக்கழகங்கள், கா்நாடகம், மராட்டியம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story