சாலை விபத்துகளில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் சாவு


சாலை விபத்துகளில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் சாவு
x

உடுப்பியில், சாலை விபத்துகளில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலியாகினர்.

மங்களூரு;

உடுப்பி தாலுகா மணிப்பால் பகுதியில் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த இந்துஜா (வயது 27) என்ற மாணவி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்துஜா, தனது தோழி வர்ஷினி என்பவருடன் ஸ்கூட்டரில் வெளியே சென்றார். ஸ்கூட்டரை, வர்ஷினி ஓட்டியுள்ளார்.

சிண்டிகேட் சர்க்கிள் அருகே சென்றபோது திடீரென வர்ஷினியின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் தறிகெட்டு ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடைந்த இந்துஜா சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி காயம் அடைந்தார்.

இதேபோல் உடுப்பி அருகே நாகூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவா சான்பாக் (45). இவர், மங்களூருவில் இருந்து பட்கல் செல்லும் நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சாலையில் வந்த கார் சதாசிவா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சதாசிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துகள் குறித்து பட்கல், பைந்தூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story