டி.கே.சிவக்குமார் துபாய் செல்ல அனுமதி; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு


டி.கே.சிவக்குமார் துபாய் செல்ல அனுமதி; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமார் துபாய் செல்ல அனுமதி அளித்து மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் இருந்து ரூ.8.59 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கில் கைதான டி.கே.சிவக்குமார் ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கு டெல்லியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் துபாயில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி கன்னட கூட்டமைப்புகள் டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்து இருந்தன.

இதனால் துபாய் செல்ல அனுமதி கேட்டு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி விகாஷ் துல் முன்பு நடந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல், டி.கே.சிவக்குமார் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க கூடாது என்று வாதிட்டார். டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வருகிற 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை துபாய்க்கு செல்ல டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


Next Story