திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
x

கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்ல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பண கையிருப்பு மற்றும் தங்க இருப்பு ஆகியவை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.3 டன் தங்கமும், ரூ.15,938 கோடி பணமும் பெடாசிட்செய்யப்பட்டுள்ளது.

கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்ல்லை. இவற்றை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். உபரி வருமானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் டெபாசிட் செய்யப்படும். வங்கிகளில்வெளிப்படையான முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த சொத்து ரூ.2.26 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story