திருப்பதி கோவில் சிறப்பு தரிசனம் - 72 மணி நேரத்தில் இவ்வளவு டிக்கெட் விற்பனையா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட், கடந்த 18ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட் வீதம் 24 நாட்களுக்கு ஆறு லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இதில் வெளியிட்ட 72 மணி நேரத்திற்குள்ளாக மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு18 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அந்த நாட்களில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story