டெசி இன பசுக்களை உருவாக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டம் - அதிகாரி தகவல்


டெசி இன பசுக்களை உருவாக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டம் - அதிகாரி தகவல்
x

கோசம்ரக்‌ஷன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் டெசி பசு இனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 3 ஆண்டுகளில் பல்வேறு கோசம்ரக்‌ஷன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவை சமீபத்திய காலங்களில் அதன் பல சமூக-மத நடவடிக்கைகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.

திருப்பதி, திருமலை மற்றும் பலமநேர் ஆகிய இடங்களில் உள்ள கோசாலைகளை மேம்படுத்துவதோடு, பல தனித்துவமான கோசம்ரக்‌ஷன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் டெசி பசு இனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள 197 கோவில்களுக்கு தேவஸ்தானம் இதுவரை ஒரு ஜோடி பசு மற்றும் ஒரு கன்றுக்குட்டியை காணிக்கையாக வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் கோசம்ரக்‌ஷனம் மற்றும் கோ பூஜையை ஊக்குவிக்க முன்வரும் கோவில்கள், பீடங்கள் மற்றும் வேத பாடசாலைகளுக்கு ஒரு ஜோடி பசு மற்றும் கன்று வழங்குவதற்கான செயல் திட்டத்தை தேவஸ்தானம் உருவாக்கி உள்ளது.

பல காணிக்கையாளர்கள் தேவஸ்தான கோசம்ரக்‌ஷன கோசாலைக்கு டெசி இன பசுக்களை காணிக்கையாக வழங்குவதற்கான தேவஸ்தான வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ளனர்.

கோ பூஜையின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக, தேவஸ்தானம் ரூ.15 கோடி காணிக்கையில் அலிபிரியில் கோமந்திரம் ஒன்றை அமைத்தது.

கோசாலைகளில் பசுக்களின் பராமரிப்புக்காக தீவனம் மற்றும் புல் வழங்க துலாபாரம் மூலம் பக்தர்கள் கோ பூஜை மற்றும் காணிக்கை வழங்க இந்த வளாகம் வசதிகளை வழங்கியது. இந்த வளாகம் கோசம்ரக்‌ஷன மற்றும் அனைத்து டெசி இன மாடுகளை சிறப்பிக்கும் கேலரியை கொண்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு மாநிலங்களில் உள்ள 516 கோசாலைகளுடன் டெசி இன மாடுகளை ஊக்குவித்தல், தகுதியின் அடிப்படையில் நிதி உதவி மூலம் பராமரிப்பது போன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேவஸ்தானம் இதுவரை 2,000 பசுக்கள் மற்றும் காளைகளின் சாணத்தை உரமாகப் பயன்படுத்தி தங்கள் வயல்களில் இயற்கை முறையில் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது.

தேவஸ்தானம் இதுவரை தங்கள் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை பயன்படுத்துவதை எதிர்த்த இயற்கை விவசாயிகளுக்கு 2,000 பால் கறக்காத மாடுகளை காணிக்கையாக வழங்கி உள்ளது. இந்தத் திட்டம் இரு தெலுங்கு மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர தேவஸ்தானமும் கோசாலைகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

இனப்பெருக்கத்துக்கு பயன்படும் கறவை மாடுகளை வாங்குவதற்கு தேவஸ்தானம் நிபுணர் குழுவை அமைத்துள்ளது. குழு வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, எஸ்.வி.கோசாலையில் இனப்பெருக்கம் செய்வதற்காக அதிக பால் கறக்கும் பசுக்களை வாங்கியது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நோடல் கோசாலைகளை அமைப்பதன் மூலம் தெலுங்கு மாநிலங்களில் கோசாலை பராமரிப்புக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. 32 நோடல் கோசாலைகளின் ஆபரேட்டர்களுக்கு சமீபத்தில் சுவேத பவனில் 2 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

தேவஸ்தான கோசாலை நடத்துபவர்களிடம் தங்களால் பராமரிக்க முடியாத கால்நடைகளை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் அவற்றை இயற்கை விவசாயிகளுக்கு காணிக்கையாக வழங்க முடியும்.


Next Story