புதிதாக கொண்டு வரப்பட்ட 3 கிரிமினல் சட்டங்களும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்: மத்திய அரசு
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. வாய்ந்த குற்றவியல் சட்டம் நிறைவேற்றப்பட்டன. இந்திய தண்டனை சட்டம், 1860-க்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்திய ஆதார சட்டம், 1872க்கு பதில் பாரதிய சாக்சியா (இரண்டாவது) என்ற பெயரிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898-க்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா என்ற பெயரிலும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.