மத்திய பிரதேசத்தில் 77-வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி...!


மத்திய பிரதேசத்தில் 77-வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி...!
x
தினத்தந்தி 23 Nov 2022 8:52 AM IST (Updated: 23 Nov 2022 8:52 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

போபால்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என தற்போது குஜராத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன் தினம் குஜராத் பயணம் முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி இன்று மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் இருந்து 2 நாள் இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மீண்டும் தொடங்கினார். ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் 77வது நாள் யாத்திரையாகும். இது அடுத்த 11 நாட்களில் மாநிலத்தின் 7 மாவட்டங்கள் வழியாக நடைபயணம் செல்லும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story