பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்...! மேலும் 10 பேரை கடித்தார்...!


பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்...! மேலும் 10 பேரை கடித்தார்...!
x

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் சிகிச்சையின் போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஜோத்பூர்:

ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை அடித்து கொன்று அவரது உடலை சாப்பிட்ட வாலிபர் ஷாம்பி நோயால் பாதிக்கப்பட்டது போல் மேலும் 10 பேரை கடித்து வைத்தார். மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார்.

பின்னர் மூதாட்டியின் சதையை சாப்பிட்டு உள்ளார். வழக்கத்திற்கு மாறான ஷாம்பி போன்ற நடத்தையை வெளிப்படுத்தியதால் உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மறுநாள் ஜோத்பூருக்கு மாற்றப்பட்டார். அவர் மருத்துவமனையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார்.

மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போது அவர் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்தார். அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜோத்பூரில் உள்ள மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில், அவர் வெறிநாய்க்கடி, வைரஸ் மூளைக்காய்ச்சல் அல்லது ஆபத்தான மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. குடிப்பழக்கத்தால் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து உள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அவரது குடும்பத்தினரை கண்டுபிடிக்க போலீஸ் குழு புறப்பட்டு உள்ளது.

அவரது பாக்கெட்டில் கிடைத்த ஆதார் அட்டையில் உள்ள முகவரிக்கு போலீசார் சென்றனர். ஆனால் அவரது குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை. மும்பையில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் ஷாபுரா செல்வதற்கான பஸ் டிக்கெட்டும் அவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

சிகிச்சையின் போது, தண்ணீர் மற்றும் வெளிச்சத்தை பார்த்தால் அவர் இளைஞர் வன்முறையில் ஈடுபடுகிறார். இந்த நிலையில் அவர் நேற்று காலை 8 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார்.

சுரேந்திராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பிரபாத் கமரியா கூறியதாவது:-

நோயாளி காலை எட்டு மணியளவில் இறந்தார். அவரது சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகள் சேதமடைந்து இருந்தன. இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும். இதற்குப் பிறகு பிரேத பரிசோதனை மற்றும் பிற மாதிரிகள் தேசிய ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம், அவரது நோய் மற்றும் இறப்புக்கான காரணங்கள் தெரியவரும் என கூறினார்.


Next Story