கல்லூரி மாணவியை கடத்திய மாணவர்கள்.. தேர்தல் முடியும் வரை காரிலேயே வைத்து சுற்றிய கும்பல்
மாணவியை அவரின் தோழிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி காரில் கடத்திய மாணவர்கள் தேர்தல் முடியும் வரை காரிலேயே வைத்து சுற்றியதாக கூறப்படுகிறது.
கொச்சி,
கேரளாவில் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற மாணவ பேரவை தேர்தலில், மாணவி ஒருவரை வாக்களிப்பதை தடுக்கும் விதமாக கடத்தி சென்றதாக கூறி 3 மாணவர்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில், மாணவர் காங்கிரஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட வகுப்பறை மாணவி பிரவீணாவை வாக்களிக்க விடாமல் செய்ய எஸ்எப்ஐ மாணவர்கள் சிலர் திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில், தேர்தல் நடைபெற்ற நாளின் காலையில் மாணவி பிரவீணாவை, அவரின் தோழிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி காரில் கடத்திய மாணவர்கள் தேர்தல் முடியும் வரை காரிலேயே வைத்து சுற்றியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாணவியை கடத்திச் சென்ற எஸ் எப் ஐ அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளதால் பரபரப்பானது.