தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி


தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
x

சுதந்திர தினமான இன்று, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக அவர் அஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி,

நாட்டின் 75 ஆவது சுதந்திட தின விழாவை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தினமான இன்று, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக அவர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியுடன் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல்படையை சேர்ந்த முப்படை தளபதிகளும் உடன் இருந்தனர்.


Next Story