"புதிய கல்விக் கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது" - ராகுல் காந்தி


புதிய கல்விக் கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 8 Oct 2022 11:54 PM IST (Updated: 9 Oct 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பரவலாக்கப்பட்ட கல்வி முறையை விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி எம்.பி., அங்குள்ள தும்கூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவது தேசவிரோத செயல் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூரும், மல்லிகார்ஜுன கார்கேயும் திறமை மிக்கவர்கள் என்று குறிப்பிட்ட அவர், இருவருமே காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுவார்கள் என கருதவில்லை என்று தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது என்றும் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பரவலாக்கப்பட்ட கல்வி முறையை விரும்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story