'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம்- மம்தா, உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை


இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்- மம்தா, உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை
x
தினத்தந்தி 13 Jan 2024 9:58 AM IST (Updated: 13 Jan 2024 1:19 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காணொளி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

எனினும், மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story