அரசு பங்களாவை காலி செய்தார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
முதல்-மந்திரியின் அரசு இல்லமான ‘வர்ஷா’ பங்களாவை விட்டு உத்தவ் தாக்கரே வெளியேறப்போவதாக தகவல் பரவியது.
மும்பை
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரியின் அரசு இல்லமான 'வர்ஷா' பங்களாவை விட்டு உத்தவ் தாக்கரே வெளியேறப்போவதாக தகவல் பரவியது. இதனால் வர்ஷா பங்களா அருகேயும், உத்தவ் தாக்கரேயின் சொந்த இல்லமான 'மாதோஸ்ரீ' முன்பும் தொண்டர்கள் குவிய தொடங்கினர். நேற்று இரவு 9.50 மணியளவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசு பங்களாவை காலி செய்து விட்டு காரில் புறப்பட்டு சென்றார். கொரோனா பாதிப்பு காரணமாக அவரது காரில் குடும்பத்தினர் யாரும் செல்லவில்லை. மற்றொரு காரில் அவரது மனைவி ராஷ்மி, மகன் ஆதித்ய தாக்கரே சென்றனர். அப்போது தொண்டர்கள் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story