மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு


மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு
x

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி.) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதன் படி இந்த பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள், தங்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு பதிலாக, பொது நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கப்படுவார் கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்து இருந்தது.இதற்கான குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் என யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்து இருந்தார் .

இதைத்தொடர்ந்து இந்த நுழைவுத் தேர்வுக்காக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர் . இதற்கான கடைசி நாள் வருகிற 22-ந்தேதியாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை 10.46 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பித்து இருப்பதாக யு.ஜி.சி. அறிவித்து உள்ளது.

இந்த பொது நுழைவுத்தேர்வுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. ஜூன் 18-ந்தே தி கடைசி நாள் இந்த நிலையில் மேற்படி மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக யு.ஜி.சி. தலைவர் ஜெ கதீஷ் குமார் நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'மத்திய பல்கலைக்கழகங்களில் 2022 கல்வி ஆண்டுக்கான முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி.) அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தேர்வுகள் வருகிற ஜூலை 3-வது வாரத்தில் நடத்தப்படும். இதற்காக இன்று (நேற்று) முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூன் 18 ஆகும்' என்று தெரிவித்தார் . கம்ப்யூட்டர் அடிப்படையிலான இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார் .


Next Story