மராட்டிய கவர்னரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதுதான்; ஆனால் எதிர்பாராதது இல்லை - துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா
மராட்டிய கவர்னரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் எதிர்பாராதது இல்லை என எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், மராட்டியத்தில் உள்ள குஜராத்தி, ராஜஸ்தானியர்களை நீக்கிவிட்டால் மாநிலத்தில் பணமே இருக்காது என பேசினார்.
கவர்னரின் இந்த சர்ச்சை பேச்சு மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மராட்டிய கவர்னரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் எதிர்பாராதது இல்லை என எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''மராட்டிய கவர்னரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் எதிர்பாராதது இல்லை. துணை ஜனாதிபதி வேட்பாளரான, முன்னாள் மேற்கு வங்க கவர்னரிடமிருந்து அவர் பெற்ற செய்தியான சர்ச்சை, முட்டாள்தனமான கருத்துகள், அரசியலமைப்பை மீறிய அதிகாரம் உள்ளதாக செயல்படுவது போன்ற செயல்களின் வெகுமதி இது" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.