சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக குறைந்துள்ளது.
மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் இருவரும் இன்று பதவியேற்க உள்ளதை அடுத்து, இது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் பலத்தை 34 ஆக உயர்த்தும். சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்த 48 மணி நேரத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story