தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை - மத்திய அரசு விளக்கம்


தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை - மத்திய அரசு விளக்கம்
x

தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

சுதந்திர தின 75-வது அமுதபெருவிழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதற்கிடையே அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், தேசிய கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசிய கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை உறுதிபடுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்' என்று கூறியுள்ளனர்.


Next Story