பா.ஜனதா ஆட்சியின் 40 சதவீத கமிஷன் விவகாரம் பிற மாநிலத்திற்கும் பரவியது; காங்கிரஸ் விமர்சனம்


பா.ஜனதா ஆட்சியின் 40 சதவீத கமிஷன் விவகாரம் பிற மாநிலத்திற்கும் பரவியது; காங்கிரஸ் விமர்சனம்
x

பா.ஜனதா ஆட்சியின் 40 சதவீத கமிஷன் விவகாரம் பிற மாநிலத்திற்கும் பரவியது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமல்படுத்திய திட்டங்களின் பெயரை மாற்றுவது, அவற்றின் நற்பெயரை பெறுவதையே பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர இதற்கு முன்பு யாரும் முயற்சி செய்யவில்லை என்று அவர் பேசியுள்ளார். ஆனால் இதற்கான முயற்சியில் காங்கிரசின் முயற்சிகளை அவர் முதலில் அறிய வேண்டும். கர்நாடக பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. அறிவாளிகள் மாநிலம் என்ற பெயர் கர்நாடக்திற்கு உள்ளது. ஆனால் தற்போது ஊழல் மாநிலம் கர்நாடகம் என்ற பெயர் வந்துள்ளது. ஊழல் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வரும் பசவராஜ் பொம்மைக்கு, தெலுங்கானாவில் வைக்கப்பட்டுள்ள 40 சதவீத கமிஷன் பேனர்களை எதிர்க்க தைரியம் இல்லை.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.


Next Story