சந்திரயான்-3 விண்கலம் வெற்றி...! - பேச வார்த்தையின்றி மகிழ்ச்சியில் திளைத்த இஸ்ரோ விஞ்ஞானி


சந்திரயான்-3 விண்கலம் வெற்றி...! - பேச வார்த்தையின்றி மகிழ்ச்சியில் திளைத்த இஸ்ரோ விஞ்ஞானி
x
தினத்தந்தி 14 July 2023 6:18 PM IST (Updated: 14 July 2023 6:34 PM IST)
t-max-icont-min-icon

சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சந்திரயான் - 3 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. நிலவை ஆராய இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம் அடுத்த மாதம் 23-ம் தேதி மாலை நிலவில் தரையிறக்க உள்ளது. சூரிய வெளிச்சம் இல்லாத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்க உள்ளது.

நிலவில் தரையிறங்கிய உடன் விண்கலத்தில் இருந்து ரோவர் நிலவில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளது. சந்திரயான் விண்கலம் - 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். முன்னதாக, 2019ம் ஆண்டும் இதே நோக்கத்தோடு இஸ்ரோ சந்திரயான் - 2 திட்டத்தை செயல்படுத்தியது.

ஆனால், சந்திரயான் 2 திட்டத்தின் போது நிலவில் தரையிறங்கும்போது விண்கலம் நிலவில் மோதியது. இதனால் தரையிறக்கம் தோல்வியடைந்தது. தற்போது இந்தியா மீண்டும் அதே முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முறை நிலவில் தரையிறங்கும் முயற்சியில் இஸ்ரோ நிச்சயம் வெற்றிபெறும் என நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில், சந்திரயான் - 3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த உடன் இஸ்ரோ தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதற்கு முன்னதாக சந்திரயான் - 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி உரையாற்றினார். அப்போது சந்திரயான் - 3 வெற்றியால் மகிழ்ச்சியில் பேச வார்த்தையின்றி விஞ்ஞானி திளைத்து நின்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Next Story