அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கையின்படி பாட புத்தகங்கள் - மத்திய கல்வி அமைச்சகம்


அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கையின்படி பாட புத்தகங்கள் - மத்திய கல்வி அமைச்சகம்
x

அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கையின்படி பாட புத்தகங்கள் மாற்றம் செய்வதற்கான பணியை மத்திய கல்வி அமைச்சகம் செய்து வருகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி பள்ளி பாடப்புத்தகங்கள் மாற்றப்படுகின்றன. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்ற (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்கள் அடுத்த 2024-25-ம் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அது பெரிய பணி என்றபோதும், அடுத்த கல்வியாண்டை இலக்காக வைத்தே நாங்கள் செயல்பட்டுவருகிறோம். டிஜிட்டல் கற்றலுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதை கொரோனா காலம் எங்களுக்கு உணர்த்தியுள்ளது. எனவே, புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும் அதேவேளையில், டிஜிட்டல் வடிவிலும் அவை கிடைக்கும். தேவைப்படும் எவரும் அவற்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பாடப்புத்தக பாடங்கள் தேக்கம் அடைந்துவிடக்கூடாது. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றில் மாற்றம் செய்வதற்கான நிறுவன கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story