'பிரதமர் மோடியின் இந்தியாவில் பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்' - மத்திய மந்திரி நித்யானந்த் ராய்
பிரதமர் மோடியின் இந்தியாவில் பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
பிரதமர் மோடியின் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு சிறிது கூட இடம் கிடையாது என மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"இது பிரதமர் மோடியின் இந்தியா. இங்கு பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள், அல்லது மண்ணில் 7 அடிக்கு கீழ் புதைக்கப்படுவார்கள். பிரதமர் மோடியின் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு சிறிது கூட இடம் கிடையாது. பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளும் தன்மை இந்தியாவிற்கு தற்போது இல்லை."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story