நமது பாரம்பரியம், வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன: மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு


நமது பாரம்பரியம், வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன:  மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
x

உத்தர பிரதேசத்தில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி ஜெய்சங்கர், நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன என பேசியுள்ளார்.


வாரணாசி,


தமிழகத்திற்கும், உத்தரபிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்த பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது.

வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்துறை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரெயில்களில் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி இன்று நடந்து வருகிறது. சமூகம் மற்றும் தேச கட்டமைப்பில் கோவில்களின் பங்கு என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று கலந்து கொண்டார்.

வணக்கம் காசி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று பேசும்போது, நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன. அவை நமது வாழ்வின் வழியாகும் என பேசியுள்ளார்.


Next Story