பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை; சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும்: டிஆர்எஸ் தலைவர் கவிதா தலைமை நீதிபதிக்கு கடிதம்!


பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை; சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும்: டிஆர்எஸ் தலைவர் கவிதா தலைமை நீதிபதிக்கு கடிதம்!
x
தினத்தந்தி 19 Aug 2022 6:56 PM IST (Updated: 19 Aug 2022 6:58 PM IST)
t-max-icont-min-icon

பில்கிஸ் பானு வழக்கில் கைதான 11 பேரின் விடுதலையை கண்டித்து, கவிதா தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஐதராபாத்,

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது தொடர்பாக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த தலைவர் கவிதா கல்வகுந்த்லா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 11 பேரின் விடுதலையை கண்டித்து, கவிதா கல்வகுந்த்லா தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும் என்றும் கவிதா வலியுறுத்தினார்.

"அநீதியைச் தவிர்க்கவும்" மற்றும் "சட்டங்களின் மீதான தேசத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றவும்" சுப்ரீம் கோர்ட்டை அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 2002 ஆம் ஆண்டு பில்கிஸ்பானு வழக்கில், 11 குற்றவாளிகளின் விடுதலை தொடர்பாக மாண்புமிகு இந்திய நாட்டின் தலைமை நீதிபதிக்கு எனது கடிதம்.

இந்த கொடூரமான குற்றம் நடந்த போது பில்கிஸ் பானு 21 வயது மற்றும் 5 மாத கர்ப்பமாக இருந்தார். நமது சட்டங்களின் மீதான தேசத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றுமாறு இந்தியாவின் மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டை நான் மன்றாடுகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story