டெல்லியில் பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சந்திப்பு
நிலுவையில் உள்ள நிதிப்பகிர்வுகள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
புதுடெல்லி,
தெலுங்கானா மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மாநிலத்தின் துணை முதல் மந்திரியாக பட்டி விக்ரமர்கா பதவியேற்றார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது துணை முதல்-மந்திரியும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது தெலுங்கானா மாநில வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள நிதிப்பகிர்வுகள் ஆகியவை குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
Related Tags :
Next Story