தேஜஸ்வி சூர்யா எம்.பி. வீட்டுக்கு மசாலா தோசை அனுப்பிய காங்கிரசார்


தேஜஸ்வி சூர்யா எம்.பி. வீட்டுக்கு மசாலா தோசை அனுப்பிய காங்கிரசார்
x

காங்கிரசார் அனுப்பிய மசாலா தோசை தேஜஸ்வி சூர்யா எம்.பி. வீட்டிற்கு சென்றது.

பெங்களூரு:

கடும் விமர்சனம்

பெங்களூருவில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். இந்த நேரத்தில் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் மசாலா தோசை சாப்பிட்டார். அதை அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அந்த உணவகத்தில் மசாலா தோசை ருசியாக உள்ளதாகவும், அனைவரும் வந்து இங்கு சாப்பிடலாம் என்றும் கேட்டு கொண்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதற்கு இணையவாசிகள் கடும் விமர்சனம் செய்தனர். இதனால் அவருக்கும், பா.ஜனதாவுக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் இளைஞர் அணியினர், தேஜஸ்வி சூர்யா வீட்டின் அருகே போராட்டம் நடத்தினர். அவர்கள் தேஜஸ்வி சூர்யாவுக்கு மசாலா தோசை பார்சல் அனுப்பி வைத்ததாக கூறினர். இதற்கு பதிலளித்த தேஜஸ்வி சூர்யா, காங்கிரசார் அனுப்பிய மசாலா தோசை தனக்கு வந்து சேரவில்லை என்றும், இதிலும் அக்கட்சியினர் முறைகேடு செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.

மசாலா தோசை

இந்த நிலையில் காங்கிரசார் அனுப்பிய மசாலா தோசை நேற்று தேஜஸ்வி சூர்யா வீட்டிற்கு சென்று வினியோகம் செய்ய 'டெலிவரி பாய்' முயற்சி செய்தார். அப்போது அவரைஜனதாவினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு ரபரப்பு ஏற்பட்டது.


Next Story