ஓட்டலில் தோசை சாப்பிட்ட தேஜஸ்வி சூர்யா எம்.பி.; காங்கிரஸ் விமர்சனம்
மழை வெள்ளத்தை கண்டுகொள்ளாமல் தேஜஸ்வி சூர்யா எம்.பி. ஓட்டலில் தோசை சாப்பிட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மூழ்குவதில் பல்வேறு விதங்கள் உள்ளன. அதில் மக்கள் வெள்ளத்தில் மூழ்குவது, மந்திரி தூக்கத்தில் மூழ்குவது. வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி கூட்டிய கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் தூக்கத்தில் இருந்தார். ஆனால் ஹலால் இறைச்சி என்று சொன்னால் உடனே தூக்கத்தில் இருந்து சட்டென எழுந்து விடுவார். சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ., லஞ்சமாக வாங்கிய பணத்தில் அரசுக்கும் கொடுத்துள்ளதாக வெளியான ஆடியோ உரையாடலில் கூறியுள்ளார். அரசு என்றார் யார்?. அப்படி என்றால் ஒட்டுமொத்த அரசே இந்த முறைகேட்டை நடத்தியுள்ளதா?. இதுகுறித்து பசவராஜ் பொம்மை பதிலளிக்க வேண்டும். பெங்களூரு மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் தேஜஸ்வி சூர்யா எம்.பி. ஓட்டலுக்கு சென்று தோசை சாப்பிடுவதில் ஆர்வமாக உள்ளார். விளையாடுகிறவர்களை எம்.பி. ஆக்கினால் அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.