பாதுகாப்பு தொழில்துறையில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு தமிழக அரசு ஒப்பந்தம்: மத்திய மந்திரி தகவல்
பாதுகாப்பு தொழில்துறையில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தன்னிறைவு இந்தியா மற்றும் 'மேக் இன் இந்தியா' என்கிற இலக்கை அடைவதற்கு நாட்டில் 2 பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் நிறுவப்பட்டு உள்ளன. ஒன்று உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, அலிகார், சித்ரகூட், ஜான்சி, கான்பூர் மற்றும் லக்னோ வழித்தடத்தில் அமைகிறது.
மற்றொன்று தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, ஓசூர், சேலம் வழித்தடத்தில் அமைகிறது. தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி 53 தொழில்கள் மூலம் ரூ.11 ஆயிரத்து 794 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஏற்கனவே ரூ.3,847 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்துக்காக மொத்தம் 910 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை மத்திய பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய்பட் மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story