சுவாதி மாலிவால் வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு


சுவாதி மாலிவால் வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
x

சுவாதி மாலிவாலை தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவால் உதவியாளர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த மாதம் 13-ந் தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

இதையடுத்து, இந்த புகாரின் பேரில் பிபவ் குமாரை போலீசார் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து கடந்த மாதம் 18-ந் தேதி கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிபவ் குமாரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஜூலை 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கவுரவ் கோயல் உத்தரவிட்டார்.


Next Story