`அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பொதுநல மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
`அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பொதுநல மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக எஸ்.ஐ.டி. (சிறப்பு விசாரணைக்குழு) அமைக்கக்கோரி வக்கீல் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் 'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி வக்கீல் எம்.எல்.சர்மா, இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் ஹர்ஷ் அஜய் சிங், முப்படை தளபதிகளை நீக்கக்கோரி வக்கீல் ஜெய சுகீன் உள்பட 5 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பொதுநல மனுக்களை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.
Related Tags :
Next Story