புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை


புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே மத்திய அரசின் புதிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு தடைக் கோரி டெல்லியை சேர்ந்த வக்கீல் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், "பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கத்தில் இருந்த சமயத்தில் எந்த விவாதமும் இல்லாமல் புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. எனவே அவற்றின் நம்பகத்தன்மையை மதிப்பிடும் ஒரு நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்" என கோரியுள்ளார்.

இந்த நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என தெரிகிறது.


Next Story