மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனு - விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனு - விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 12 Jan 2024 11:44 AM GMT (Updated: 12 Jan 2024 11:48 AM GMT)

ஏற்கனவே நிலுவையில் உள்ள பொதுநல மனுவுடன் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்வரும் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன் அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர் யோகமாயா, டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுமாறு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இது போன்ற மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை திரும்ப பெறவும், நிலுவையில் உள்ள பொதுநல மனுவுடன் இடையீட்டு மனுவை தாக்கல் செய்யவும் அனுமதி அளித்தனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த பொதுநல மனு, வரும் 16-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story