'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்கும் விவகாரம் கேரள அரசுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு 17-ந்தேதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கும் விவகாரம் கேரள அரசுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு 17-ந்தேதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2023 5:15 AM IST (Updated: 16 May 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

இந்த சூழலில் கேரளாவில் இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

புதுடெல்லி,

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் ஒரு சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல மாநிலங்களில் அதனை திரையிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி மே 5-ந்தேதி நாடு முழுவதும் இத்திரைப்படம் வெளியானது.இந்த சூழலில் கேரளாவில் இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு படத்துக்கு தடை விதிக்க மறுத்து, வழக்கை தள்ளூபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இதே விவகாரம் தொடர்புடைய மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனுவை வருகிற 17-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.


Next Story