ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு சட்டம்: காங்கிரஸ் நிர்வாகி மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு சட்டம்: காங்கிரஸ் நிர்வாகி மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

கோப்புப்படம்

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு சட்டம் தொடர்பான காங்கிரஸ் நிர்வாகியின் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு வகை செய்யும் மத்திய அரசின் சட்டத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, 3 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எனவே இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் சட்டத்தை எதிர்த்து மனுதாரரின் மனு அமைந்துள்ளதால் முதலில் ஐகோர்ட்டு விசாரிப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்து, மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story