திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா சாமி தரிசனம்
x

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தனது குடும்பத்தினருடன் வந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சுப்ாீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தனது குடும்பத்தினருடன் ேநற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் தங்கி இரவு அவர்கள் ஓய்வெடுத்தனர்.

முன்னதாக, திருமலைக்கு வந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து காலை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தனது குடும்பத்தினருடன் வந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் முன்பு அறங்காவலர் குழு தலைவர், ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர். கோவிலில் மூலவர் ஏழுமலையான் மற்றும் இதர சன்னதிகளில் என்.வி.ரமணா சாமி தரிசனம் செய்தாா். தங்கக்கொடி மரம், பலி பீடத்தை வலம் வந்து வணங்கினார். கோவிலில் உள்ள ெரங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப் பிரசாதம், சாமி படம் வழங்கப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

சாமி தரிசனத்தின்போது தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உஜ்ஜல்புயான், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரி நரசிம்மகிஷோர், கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் குடும்பத்தினர் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.


Next Story