நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்காலத்தடை


நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்காலத்தடை
x

நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

பாஜக விலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையியில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

நுபுர் ஷர்மாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அரசு, டெல்லி காவல்துறை, மராட்டியம், மேற்கு வங்கம், கர்நாடகம், ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகளில் கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. தன்னை கைது செய்ய தடை விதிக்கக்கோரி நுபுர் ஷர்மா தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story