ஒடிசாவில் விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்


ஒடிசாவில் விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்
x

விநாயகர் சிலையை அமர்த்தி இருந்த இரும்பு பீடத்தை பிடித்தபடி வந்த மாணவர்களை மின்சாரம் தாக்கியது.

கட்டாக்,

வடமாநிலங்கள் பலவற்றில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே நராஜ் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு டிராக்டரில் பிரமாண்ட விநாயகர் சிலையை வைத்து ஊர்வலம் வந்தனர்.

அப்போது ஒரு இடத்தில் விநாயகர் சிலை, மின்சார வயர் மீது உரசியது. இதில் சிலையுடன் இணைக்கப்பட்டிருந்த கொடி கம்பியின் வழியாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் விநாயகர் சிலையை அமர்த்தி இருந்த இரும்பு பீடத்தை பிடித்தபடி வந்த மாணவர்களை மின்சாரம் தாக்கியது.

அதில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்றொரு சம்பவத்தில், புவனேஸ்வரம் அருகே சாந்திபள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


Next Story