ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாய்கிறது 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட்


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்
x

Image Courtesy : @isro twitter

‘எஸ்.எஸ்.எல்.வி-டி2’ ராக்கெட் நாளை காலை 9.18 மணிக்கு 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட் நாளை காலை 9.18 மணிக்கு 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது. 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட், தனது 15 நிமிட பயணத்தில் மூன்று செயற்கைக்கோள்களை 450 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் 'இ.ஓ.எஸ்-07' செயற்கைக்கோள், அமெரிக்காவைச் சேர்ந்த அண்டாரிஸ் நிறுவனத்தின் 'ஜேனஸ்-1' செயற்கைக்கோள், சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனத்தின் 'ஆஸாதிசாட்-2' ஆகிய 3 செயற்கைக்கோள் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் 'ஆஸாதிசாட்-2' என்பது 750 மாணவிகள் இணைந்து உருவாக்கிய 8.7 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட 'எஸ்.எஸ்.எல்.வி-டி1' ராக்கெட், அதன் இரண்டாம் கட்ட நிலையில் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story