விரைவு கோர்ட்டு அமைப்பதை தீவிரப்படுத்துங்கள் - தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட மந்திரி கடிதம்


விரைவு கோர்ட்டு அமைப்பதை தீவிரப்படுத்துங்கள் - தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட மந்திரி கடிதம்
x

கோப்புப்படம்

விரைவு கோர்ட்டு அமைப்பதை தீவிரப்படுத்துங்கள் என ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

அனைத்து ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, 1,800 விரைவு கோர்ட்டுகளும், 1,023 விரைவு சிறப்பு கோர்ட்டுகளும் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஜூலை 31-ந் தேதி நிலவரப்படி, 896 விரைவு கோர்ட்டுகளும், 731 விரைவு சிறப்பு கோர்ட்டுகளும் மட்டுமே இயங்கி வருகின்றன.

அந்த கோர்ட்டுகளில் மொத்தம் 16 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசித்து, விரைவு கோர்ட்டுகள் மற்றும் விரைவு சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பதை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story