திருப்பதியில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் லட்டா? - தேவஸ்தானம் விளக்கம்


திருப்பதியில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் லட்டா? - தேவஸ்தானம் விளக்கம்
x

கோப்புப்படம் 

திருப்பதி கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற தகவல், வதந்தி என தேவஸ்தானம் கூறியுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்க்காத லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளதாக சமூக ஊடங்களில் தகவல் பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி லட்டு காப்புரிமை பெற்றது என்றும், சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விகுறியாகி விடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு வழங்கினால், பிறகு வேறு ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து, வேறு சில பக்தர்கள், வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என்றும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.


Next Story