குரங்கு அம்மை தொற்று தடுக்க சிறப்பு குழு - மத்திய அரசு முடிவு
குரங்கு அம்மை தொற்று தடுக்க சிறப்பு குழுவினை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
உலகை அச்சுறுத்தி வருகிற குரங்கு அம்மை 75 நாடுகளில் பரவி இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சுகாதார நெருக்கடியை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்தியாவிலும் இந்த நோய் நுழைந்து கேரளாவில் 3 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த நோய் பரவலைத்தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து டெல்லியில் மத்திய அரசின் உயர் மட்ட அளவிலான கூட்டம் ஆராய்ந்தது. அதில் குரங்கு அம்மையை கண்டறிவதற்கான வசதிகளை விரிவுபடுத்தவும், நோய்க்கான தடுப்பூசிகள் தொடர்பான வளர்ந்து வரும் போக்குகளை ஆராயவும், அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகவும் குரங்கு அம்மைக்கான சிறப்பு பணிக்குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
விரைவில் இந்த பணிக்குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story