23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
அதிவேக இணைய சேவைக்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தி வருகிறது.
வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உலகம் முழுவதும் அதிவேக இணையதள சேவையை வழங்க ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்கின் கனவு திட்டம் ஆகும். இதற்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி இதுவரை 5 ஆயிரத்திற்கு அதிகமான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் மேலும் 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story