சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 12 மணிநேரம் நடை அடைப்பு...!


சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 12 மணிநேரம் நடை அடைப்பு...!
x

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை 12 மணிநேரம் நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை,

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அந்தவகையில் தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், கிரகணம் நடைபெறும் நாளில் திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் அன்னபிரசாதம் வழங்கப்படாது எனவும், பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு திருமலை யாத்திரைக்கு திட்டமிடுமாறும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story