தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் நெய்யப்பட்ட பட்டு வஸ்திரங்கள் ஏழுமலையான், பத்மாவதி தாயாருக்கு காணிக்கை


தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் நெய்யப்பட்ட பட்டு வஸ்திரங்கள் ஏழுமலையான், பத்மாவதி தாயாருக்கு காணிக்கை
x

தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் நெய்யப்பட்ட பட்டு வஸ்திரங்கள் ஏழுமலையான், பத்மாவதி தாயாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.

திருமலை,

தெலுங்கானா மாநிலம் சிரிசில்லாஸ் பகுதியைச் சேர்ந்த பக்தர் நல்லவிஜய். இவர், திருப்பதி ஏழுமலையானுக்கும், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட வஸ்திரங்களை நேற்று காணிக்கையாக வழங்கினார்.

அந்த வஸ்திரங்களை திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி பெற்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதுகுறித்து பக்தர் நல்லவிஜய் கூறுகையில், ஒரு சிறிய அளவிலான தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவில் ஏழுமலையானுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினேன். அதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 5 கிராம் எடையில் தங்க ஜரிகையால் தயார் செய்யப்பட்ட சேலையை காணிக்கையாக வழங்கி உள்ளேன், என்றார்.


Next Story