2 அல்லது 3 குழந்தைகள் இருந்தால் சிக்கிம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் 7 லட்சம் ஆகும்.
காங்டாக்,
சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் 7 லட்சம் ஆகும். இதுதான், நாட்டிலேயே மிகவும் குறைவு. குழந்தை பிறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் பூர்வகுடி சமூகங்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது குறித்து முதல்-மந்திரி பிரேம்சிங் தமங் கடந்த ஜனவரி மாதம் கவலை தெரிவித்தார். குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்த ஊதிய உயர்வு அளிக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், 2 அல்லது 3 குழந்தைகள் வைத்துள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 2 குழந்தைகள் வைத்திருந்தால், ஒரு முன்பணம் பெறலாம். 3 குழந்தைகள் வைத்திருந்தால் கூடுதல் ஊதிய உயர்வு பெறலாம்.
கணவன்-மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால் ஒருவர் மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இந்த சலுகை அமலுக்கு வருகிறது. ஆனால், குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கு இச்சலுகை கிடையாது.