சிக்கிம் சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி தமங் உள்ளிட்ட 147 வேட்பாளர்கள் போட்டி


சிக்கிம் சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி தமங் உள்ளிட்ட 147 வேட்பாளர்கள் போட்டி
x

9 தொகுதிகளை உள்ளடக்கிய காங்டாக் மாவட்டத்தில் 44 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காங்டாக்:

நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 32 தொகுதிகளுக்கும், ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கும் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல்-மந்திரி பி.எஸ்.தமங், முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங் உள்ளிட்ட 147 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

9 தொகுதிகளை உள்ளடக்கிய காங்டாக் மாவட்டத்தில் 44 வேட்பாளர்களும், 4 தொகுதிகளை உள்ளடக்கிய சோரங் மாவட்டத்தில் 16 பேரும், 5 தொகுதிகள் கொண்ட பாக்யாங் மாவட்டத்தில் 24 பேரும், 7 தொகுதிகள் கொண்ட நாம்சி மாவட்டத்தில் 29 பேரும், 4 தொகுதிகள் கொண்ட கியால்ஷிங் மாவட்டத்தில் 25 பேரும், 3 தொகுதிகள் கொண்ட மன்கன் மாவட்டத்தில் 9 பேரும் போட்டியிடுகின்றனர்.

மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை 14 பேர் போட்டியிடுகின்றனர்.


Next Story