ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்கவில்லை


ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்கவில்லை
x

ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்கவில்லை.

உப்பள்ளி:

உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்திருக்க வேண்டும். அவரை அழைக்காமல் இருந்தது தவறு. அவர், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மட்டும் இல்லை. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும் மல்லிகார்ஜுன கார்கே இருந்து வருகிறார். எனவே அவருக்கு முறையான அழைப்பு கொடுத்திருக்க வேண்டும். ஜி-20 மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதில் உறுப்பினரும் இல்லை.

ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் நான் பங்கேற்கவில்லை. நான் ஏற்கனவே திட்டமிட்டுள்ள சில வேலைகள் இருக்கிறது. அந்த வேலைகள், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால், ஜனாதிபதி அளிக்கும் விருந்திற்கு செல்லவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story