சித்தராமையா காய்ச்சலால் பாதிப்பு


சித்தராமையா காய்ச்சலால் பாதிப்பு
x

கர்நாடக காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்கள் சித்தராமையா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமாக இருப்பவர் சித்தராமையா. இவருக்கும், அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவது தொடர்பாக பனிப்போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது கட்டமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. இதனால் அவர் இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

இதை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து பா.ஜனதா அரசு விசாரணையை அமைப்புகளை ஏவிவருவதாக கூறி கர்நாடக காங்கிரஸ் சார்பில் இன்று பெங்களூருவில் மவுன தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சித்தராமையா காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு காய்ச்சல் குணமாக ஊசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இன்று நடைபெறும் காங்கிரஸ் மவுன தர்ணாவில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.


Next Story